மீண்டும் உருவானது புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த குறைந்த காற்றாழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய மேற்கில் உள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
உள் மாவட்டங்களில் மிதமான கனமழை பெய்யும். சென்னையில் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் வருகிற 7ம் தேதி முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.