இந்தியாவை உலுக்கும் பேரிடர்..!! எந்த ஒரு இந்திய ஊடகமும் வெளியிடாத பகீர் தகவல்..?

தமிழகத்தில் மழை வாட்டி வதைத்து வரும் வேளையில் உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம் இந்தியாவை நிலைகுலைய செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்து சிதறியதில் 25 பேர் பலியானார்கள் மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறனர்.

முதலில் இறப்பு எண்ணிக்கை 16 என்று மட்டும் செய்திகளில் வந்ததோடு சரி, தற்போது வரை அந்த சம்பவம் முற்றிலுமாக முடிமறைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

இப்போது இறப்பு எண்ணிக்கை 50யும் தாண்டி விட்டது. இது இந்திய அளவில் அனல் மின்நிலையங்கள் மீதான பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் முடிந்த வரை தகவல் கசியாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

இந்த சம்பவத்தின் பின்னணியை பார்த்தோம் என்றால்,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

இந்த அனல் மின் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் தான் திறக்கப்பட்டது. அதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் பேரிடரை எற்படுத்தும் வகையில் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் நிகழ்விடத்திலேயே 16 பேர் பலியாகினர். மேலும் சிறுக சிறுக அதிகரித்து தற்போது 50 உயிர்கள் பறிபோய் உள்ளது.

அனல்மின் நிலையத்தில் இன்னும் சில உடல்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை.

பலியானவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு கருகிவிட்டன. காயம் அடைந்தவர்களில் 4 அதிகாரிகளும் அடங்குவர்.

காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

எந்த ஒரு இந்திய ஊடகமும் இது குறித்த களநிலவர தகவல்களை வெளியிடவில்லை. மக்களின் நலனுக்காக செயல்படவேண்டிய ஊடகங்கள் இப்படி மூடி மறைப்பது எந்த மாதிரியான மனப்போக்கு என்று தெரியவில்லை.

இன்று உ.பியில் நடந்தது நாளை தமிழகத்தில் நடந்தால் என்ன நிலை.?

எண்ணெய் கழிவை வாளியால் அகற்றிய அவலம். தெர்மாகோலால் ஆற்றை முடிய திட்டம். மழை வெள்ளத்தை ஜேசிபி வைத்து தள்ளிய அவலம்.

இப்படி இது போன்ற டிஜிட்டல் திட்டங்களால் தான் மீட்பார்களா.?

தமிழக மக்களே உங்கள் ஊரில் செயல்படுத்தப்பட்ட அத்தனை திட்டங்களும் உங்களின் அழிவிற்காய் புகுத்தப்பட்டது என்பதை உணருங்கள்.

அனைத்து ஆபத்தான திட்டங்களை அகற்ற போராடுங்கள் இன்று கடந்து சென்றால் நாளை நமது இனமே அழிவது உறுதி.