2015-க்கு பிறகு சென்னையில் உள்ள மெரினா கடற்பகுதி மீண்டும் கருப்பு நிறமாக மாறியுள்ளது.
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மெரினா கடற்கரை பகுதியில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடற்கரை முழுவதும் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், மெரினா கடற்கரை தனது அழகான நீலம் மற்றும் பச்சை நிறத்தை இழந்து தற்போது கருப்பாக மாறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ல் சென்னையில் டிசம்பர் மாதம் வரலாறு காணாத கனமழை பெய்தது.
அந்த சமயத்திலும் மெரினா கடற்கரை இப்படி தான் கருப்பாக மாறியிருந்தது.
கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் இருந்த மொத்த கழிவுகளும் மழை நீரில் அடித்து வந்து கடலில் கலந்ததால் தான் கடலானது கருப்பு நிறமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.