கட்டுநாயக்க விமான நிலையத்தில் விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று சாரம் அணிந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேற்கத்தைய நாகரீகத்தை கொண்ட வெள்ளை இனத்தவர்கள் சாரம் அணிந்து வந்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படத்தில், நடிகர் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பிரான்ஸ் செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மெர்சல் திரைப்படம் தற்போது பல நாடுகளில் பேசப்பட்டு வரும் நிலையில், அதன் காரணமாக ஈர்ப்பு கொண்ட இளைஞர்கள் இவ்வாறு சாரம் அணிந்து இலங்கை வந்திருக்கலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.