சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்: ஹெளதி கிளர்ச்சியாளர்கள் அட்டகாசம்

சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யேமன் நாட்டிலுள்ள ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தியுள்ளனர்.

யேமனில் உள்ள மறைவிடத்தில் இருந்து பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை ரியாத் விமான நிலையம் குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஏவுகணையானது 500கி.மி தொலைவு கடந்து வந்து ரியாத் விமான நிலையத்தை தாக்கியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பயங்கரமான வெடிச்சத்தமும் கடும் புகை மூட்டமும் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தின் பாதிப்புகள் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

யேமன் நாட்டில் அரசு அதிகாரப்பூர்வ படைகளுக்கும் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்த வண்ணம் உள்ளன.

இதில் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா அரசு களமிறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.