வயிற்றில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக நேற்று பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்புவுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
அவர் கண்விழித்ததும் வழக்கம் போல ட்விட்டரில் ஆக்டிவ்வாக பதிவிட ஆரம்பித்துவித்துவிட்டார். சென்னையில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்ற வேலை செய்த போலீசாரை பாராட்டி தன் முதல் ட்விட்டை பதிவு செய்துள்ளார்.