பிரித்தானிய இளம்பெண் எகிப்திய சிறையில் படுகொலை!

மருத்துவர்கள் பரிந்துரைத்த போதை மருந்தை எடுத்துச் சென்ற பெண் பிரித்தானிய சுற்றுலா பயணி எகிப்திய சிறையில் கொல்லப்படலாம் என அவரது சகோதரி அச்சம் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் சுற்றுலா சென்ற பிரித்தானியர் Laura Plummer(33) வலி நிவாரணியாக மருத்துவர்கள் பரிந்துரைத்த போதை மருந்து ஒன்றை வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் எகிப்தில் உள்ள Hurghada சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

கடந்த 26 நாட்களாக சிறையில் இருக்கும் அவர் தம்மை விடுவிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அல்லது தம்முடன் சிறைவைக்கப்பட்டிருக்கும் 25 நபர்களில் ஒருவரால் தாம் படுகொலை செய்யப்படலாம் எனவும், தம்மை சந்திக்க வந்த பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

18812708_314538985634736_2425149259302043648_nஎகிப்தில் உள்ள தமது ஆண் நண்பருக்காகவே குறித்த வலி நிவாரணிகளை தாம் எடுத்துச் சென்றுள்ளதாகவும், ஆனால் தம்மை போதை மருந்து கடத்தல் கும்பலுடனும், பாலியல் தொழிலாளிகளுடன் சிறையில் அடைத்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுவரை தமது மகளின் வழக்கு தொடர்பாக 10,000 பவுண்ட் வரை செலவு செய்துள்ளதாக கூறும் லாராவின் தந்தை, தமது மகளை வெளிநாட்டவர் என்பதாலையே சிக்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.