ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என கூறிய கமலை தூக்கில் இட வேண்டும் அல்லது சுட்டுதள்ள வேண்டும் என வன்முறையை தூண்டும் விதத்தில் இந்து மகாசபை துணைத் தலைவர் பேசியதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கமலின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இது போன்ற மிரட்டல் விடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.