எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள்ளான குறுகிய காலப்பகுதியில் முப்பது மில்லியன் இலட்சம் ரூபா கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அரசாங்கத்தைப் பாரம் எடுக்கும் போது திறைசேரி காலியாக இருந்தது. சேவைகள் மூலமான வருமானம் மட்டுமே அரசாங்கத்தின் வருமானமாக இருந்தது.
ஏற்றுமதி வர்த்தகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்பட்டதால் ஏற்றுமதி வருமானம் குறைந்து போயிருந்தது.
தற்போதைக்கு அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாம் கடந்த கால நெருக்கடிகளை விட்டும் ஓரளவுக்கு மீண்டுள்ளோம். அரசாங்கத்தின் வருமானமும் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும், தெற்காசியப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையே அதிகூடிய கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதுவரைக்கும் இந்த விடயம் குறித்து எவரும் பேசவேயில்லை.
அதே போன்று எதிர்வரும் சில வருடங்களுக்குள்ளாக மூன்று கோடி மில்லியன் ரூபாக்களை கடனாக திருப்பிச் செலுத்தும் நெருக்கடியையும் நாடு எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான சிக்கல்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு புதிய அரசியலமைப்பு ஒன்றையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.