பயங்கரவாதத்தை விட பாதாள உலக கும்பல் ஆபத்தானது : மஹிந்த

பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத குழுக்களை விட பாதாள உலகக் கும்பல்கள் ஆபத்தானவை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வலியுறுத்தியுள்ளார்.

1043953432makinda