பபுவா நியூகினியின் மனுஸ் தீவிலுள்ள அவுஸ்திரேலியா வின் புகலிடக்கோரிக்கையா ளர்களுக்கான தடுப்பு நிலை யம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ள நிலையில் அந்த நிலையத்தை விட்டு வெளியேற மறுத்து வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அருந்துவதற்கு நீர் இல்லாததால் நீரைப் பெறுவதற்காக அந்த தடுப்பு நிலைய பகுதிக்குள் சுயமாக கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நிலையம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக மூடப்பட்டதையடுத்து அதற்கான நீர் மற்றும் மின்சார விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த தடுப்பு நிலையத்தை விட்டு வெளியே வந்தால் தாம் உள்ளூர்வாசிகளால் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அந்த நிலையத்தில் சுமார் 600 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர்.