அரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று சிறிலங்கா அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து ரகர் போட்டியை கண்டு களித்தனர்.
கொழும்பில் நேற்று நடந்த ரகர் போட்டியை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும், அவரது மனைவி சிரந்தி ராஜபக்சவும் கண்டுகளித்தனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு அருகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம அமர்ந்திருந்து போட்டியைப் பார்வையிட்டார்.
இதன்போது, மலிக் சமரவிக்கிரம முந்திரிப் பருப்புகளை, மகிந்த ராஜபக்ச இணையர்களுடன் இணைந்து சாப்பிட்டார்.