நியூசிலாந்து அணியுடனான இன்றைய போட்டி மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாகியுள்ள முகமது சிராஜ், தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் கடந்த 1ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த தொடரின் முதல் போட்டியுடன் ஆஷிஸ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு பதிலாக அறிமுக வீரராக முகமது சிராஜ் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
காஷ்மீரின் மிக எளிய குடும்பத்தில் பிறந்த தனது வாழ்நாள் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்த சிராஜ், இரு அணிகள் இடையேயான போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது, கண்ணீர் விட்டு தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.