முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னா சென்ற வருடம் டெங்கு மற்றும் மூளை காய்ச்சல் காரணமாக காலமானார்.
இது பற்றி இன்று ட்விட்டரில் பதிவிட்ட விவேக் “நாம் பொக்கிஷமாக நினைக்கும் ஒருவரை இழக்க நேரிடுகிறது. என்ன செய்ய முடியும்?” என சோகமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் சென்னை மழை மீட்பு பணிகள் பற்றி ட்விட்டிய அவர் “இடையராது பணி ஆற்றும் மீட்புக் குழு, காவல் துறை, மாநகராட்சி, மற்றும் தீ அணைப்புத் துறைக்கு – நம் நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.