இறுதி முடிவை தெரிவித்த மைத்திரி – ரணில்

இலங்­கை­யில் பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும். ஏனைய மதங்­க­ளுக்குச் சம உரிமை வழங்­கப்­ப­டும். இத­னைச் செய்­வ­தற்கு நாம் ஒரு­போ­தும் பின்­நிற்­கப் போவ­தில்லை.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் தெரிவித்துள்ள­னர்.

7ஆவது பன்­னாட்டு பௌத்த மாநாடு அல­ரி­ மா­ளி­கை­யில் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் உரை­யாற்­று­கை­யி­லேயே இரு­வ­ரும் மேற்­கண்­ட­வாறு கூறி­னர்.

Sri Lankan President Maithripala Sirisena, left, and Prime Minister Ranil Wickremesinghe attend the Independence Day celebration parade in Colombo, Sri Lanka, Thursday, Feb. 4, 2016. A Tamil-language version of Sri Lanka's national anthem was performed at the country's independence ceremony on Thursday, lifting an unofficial ban in another step toward post-civil war ethnic reconciliation. (AP Photo/Eranga Jayawardena)

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, இந்த நாட்­டில் சகல மதங்­க­ளும் இணைந்து சம­மாக வாழக்­கூ­டிய ஒரு சூழல் உருவாக்­கப்­பட வேண்­டும்.

அதே­போல் பௌத்­தம் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அதற்­க­மைய நாடு இயங்க வேண்­டும் என்­ப­தில் நாம் உறு­தி­யாக உள்­ளோம்.

நீண்­ட­ கா­லப் போரை எதிர்­கொண்ட நாடு என்ற வகை­யில் எமது நாட்­டில் சமூக இன ஒற்­று­மை­யைப் பலப்­ப­டுத்தி, ஒரு இணைந்த சமூ­க­மாக முன்­னோக்கிச் செல்ல, எதிர்­கால சந்­த­தி­யி­னர் அமை­தி­யாக வாழ ­வேண்­டிய வகை­யில் பௌத்த கொள்­கைக்கு அமைய நாம் செயற்­பட வேண்­டும் என்­றார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இலங்­கை­யில் பௌத்­தம் மிக நீண்­ட­கால வர­லாற்றைக் கொண்­டுள்­ளது. அசோகச் சக்­க­ர­வர்த்தி மூல­மாக இலங்­கை­யில் பௌத்­தம் உருப்­பெற்­றதை அடுத்து மிக நீண்­ட­கால வர­லாற்­றைத் தோற்­று­வித்­துள்­ளது.

பௌத்­தம் இலங்­கை­யின் பிர­தான மத­மாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மாற்றம் இல்லை. எப்போதும் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

அதே நிலையில் இலங்கையில் உள்ள ஏனைய சிறுபான்மை மக்களின் மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் அதை நாம் பேணிப் பாதுகாப்போம்.

இந்த நாட்டில் பௌத்தம் பிரதான மதமாக உள்ள அதே நிலையில் ஏனைய மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும்.

நாட்டின் சமாதானமும் அமைதியும் அதிலேயே தங்கியுள்ளது. அமைதியாக மக்கள் வாழக்கூடிய வகையில் பௌத்த மதக் கொள்கைகளை நாட்டில் மேலும் பலப்படுத்தி சமாதானத்தை உருவாக்குவோம் என்றார்.