நாடு முழுவதிலும் உள்ள கரையோர பிரதேசங்களில் இன்றைய தினம் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பலி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும் இச் செயற்பாட்டிற்காக காலநிலை அவதான நிலையத்தின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த முன்னெச்சரிக்கை செயற்பாடு ஒரு மணித்தியாலம்வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.