தீவிரவாதி வழக்கு! கமலுக்கு அழைப்பு!

தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்று கட்டுரையில் கூறி இருந்தார்.

x19-1500438037-kamal5667.jpg.pagespeed.ic.gvVFOEcp9gகமல்ஹாசன் கருத்துக்கு பா.ஜ.க மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே, கமல்ஹாசன் மீது உத்தரபிரதேசத்தில் பனாரஸ் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உள்ளனர்.

மேலும், கமலேஷ் சந்திர திரிபாதி என்ற வக்கீல், வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தார். அதில், கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

தனது மனு மீது வருகிற 22-ம் தேதி விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்து இருப்பதாக கமலேஷ் சந்திர திரிபாதி நேற்று தெரிவித்தார்.