கல்முனை தமிழ்மக்களின் ஏகோபித்த தீர்மானப்படி கல்முனை நகரசபையை இரண்டாகப் பிரிப்பதாக தீர்மாணிக்கவுள்ளது.
கல்முனையில் நேற்றைய தினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கல்முனைத்தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பெரியநீலாவணை ஈறாகவுள்ள பிரதேசத்தை கல்முனை வடக்கு நகரசபையாகவும், சாய்ந்தமருது கல்முனைக்குடி அடங்கலான பிரதேசத்தை கல்முனை தெற்கு மாகநரசபையாகவும் பிரிப்பதற்கு தீர்மானமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இரு சபைகள் அமைப்பதில் ஏதாவது பிரச்சினைகள் எழும் பட்சத்தில் மாற்றுத்தீர்மானமொன்றை எடுக்க எமது தமிழ்த்தரப்பு நிர்பந்திக்கப்பட்டு உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.