நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் மணிரத்னம் பெரிய இயக்குனர். அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நடிகர்கள் தவம் இருந்தனர்.
அதே போல விஜய்க்கும் மணிரத்னம் இயக்கத்தில் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது லட்சியம்.
இதற்காக ஒரு முறை மணிரத்னத்தை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டுள்ளார். அதற்கு அவன் எல்லாம் ஒரு நடிகரா என வாய்ப்பு தர மறுத்து விட்டார்.
அதன்பிறகு இதனை பொருட்படுத்தாமல் விஜய் வேறு இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து இன்று பெரிய இடத்தை பிடித்து விட்டார். ஆனால் மணிரத்னமோ விஜய், அஜித் போன்ற நடிகர்களை புறக்கணித்ததால் ஹிட் படம் தர முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் இந்த முறை மணிரத்னத்தை விஜய் புறக்கணித்து விட்டார். இதனை பழிவாங்குதல் என்று கூற முடியாது.
விஜய் பாணி வேறு என்றாகி விட்டது. மணிரத்னத்தின் கதை அமைப்பு விஜய்க்கு ஒத்து வருமா என்ற சந்தேகம்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.