ஒடிசாவில் உள்ள மால்கங்காரி பகுதியில் சரியான மருத்துவ வசதியும், சாலை வசதியும் இல்லாததால் உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவர்கள் இருவரையும் 8.கி.மீ தூரத்திற்குக் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிரமத்திற்குள் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது, அதனால் ஓம்கர் ஹோட்டா மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் தனது உதவியாளருடன் கிராமத்திற்குள் சென்று அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார்.
ஆனால் பிரசவத்திற்கு பிறகு ரத்த போக்கி நிற்காததால் தாயையும், குழந்தையையும் கயிற்று கட்டிலில் வைத்து 8 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இப்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பல மருத்துவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ள இந்தச் சம்பவம் இன்னமும் இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகளான மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் கூட இல்லாமல் துன்பப்படுவதை காட்டுகிறது.