ஒரு ரிவியில் தலைகாட்டிய பின்னர் புகழ் பெற்று விட்டால் அந்த நடிகர் அல்லது நடிகையை வேறு சேனல் இழுத்து கொள்வது வழக்கம்.
பிரபல ரிவியில் வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் நடிகை நந்தினி. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒரு காமெடி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து போய் விட்டார். இதனால் அவரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தே தூக்கி விட்டார்கள்.
இத்தனைக்கும் பிரபல ரிவியில் தான் நந்தினிக்கு கல்யாணம் முதல் வளைகாப்பு வரை செய்து வைத்து அழகு பார்த்தார்கள்.
அதன் பின்பு நந்தினி விஜய் டிவிக்கே மீண்டு வந்து விட்டார். ஆனாலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர் போஸ்ட்டை மட்டும் கொடுக்கவே இல்லை.
அவருக்கு பதிலாக குண்டு ஆர்த்தியை கலக்கப்போவது யாரு நடுவராக களம் இறக்கியது பிரபல ரிவி. அவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வைத்து அழகு பார்த்தது.
இந்நிலையில், ஆர்த்தி தற்போது வேறொரு ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபல ரிவி அவரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தே தூக்கி விட்டது.