தமிழக அரசியலில் பெரும் மாற்றம் நிகழவாய்ப்பு..? தமிழிசை தடாலடி..!!

பிரதமர் மோடியின் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி’ நாளிதழின் பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளதால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

201710231519421104_tamilisai-soundararajan-says-threatening-me-on-phone_SECVPFபவள விழா சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவதுடன், பவள விழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

நாளை பிரதமர் வர உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை பிரதமர் வரும் பாதையில் போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.