தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் எங்கள் மத்தியில் இன்று வாழ்ந்துக் கொண்டிருப்பதாக விடுதலை புலிகளின் கிளிநொச்சி திருமலை மாவட்ட புலனாய்வு துறைகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று எம்முடன் இல்லையென ஒருசிலர் கூறிவருகின்றனர். அதை நான் முற்றாக மறுக்கின்றேன் எமது தலைவர் ஆறு இலட்சம் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
அவரது உத்தரவுக்கு அமையவே எமது செயற்பாடுகள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன.
எமது மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் வரை எங்களது பயணம் ஓயமாட்டாது” என தெரிவித்தார்.