இன்று மதியமே உசாராக ஏவிவிடப்பட்ட அதிமுக துருப்பு..?

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணைக்கு வர இருப்பதால் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மதியமே டெல்லி விரைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக உடைந்தது.

இதனையடுத்து ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் ஒ.பி.எஸ்ஸுக்கும், சசிகலா தரப்பு டி.டி.வி.தினகரனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

இதன் காரணமாக தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. அதன் பின்னர் ஒ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் கைகோர்த்தனர்.

ஆனால் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற 4-ம் கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஐந்தாம் கட்ட விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினகரன் தரப்பு கால அவகாசம் கேட்டதால் நவம்பர் 6 (நாளை) இரட்டை இலை மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.

நாளையே இறுதி விசாரணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. தினகரன் தரப்பின் கோரிக்கைகளையும் , வாந்தங்களையும் பொறுத்தே முடிவு அமையும். எடப்பாடி தரப்பு ஏற்கனவே உறுதியாகி விட்டது.