வெளிநாட்டில் சினிமா பாணியில் இலங்கையர்களின் மோசடி! நாடுகடத்த உத்தரவு

வெளிநாடொன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்களுக்கு தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் பாரிய பணத்தொகையை கொள்ளையடித்த இலங்கையர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (12)கடந்த மே 6 ஆம் திகதி தாம் பணியாற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பணப்பொதிகளில் இருந்து 1.198 மில்லியன் டினார் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

22 மற்றும் 29 வயதிற்குட்பட்ட இலங்கை காவலர்களே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த ஆறு இலங்கையர்களும் ஒன்றாக திட்டமிட்டுள்ளதுடன், Al Muraqqabat பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்ட போது அவர்கள் பணத்தை திருடியுள்ளனர்.

திருடப்பட்ட சில தொகை பணத்தை வைத்திருந்த இரு இலங்கை சுத்திகரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சுத்திகரிப்பாளர்களும் தங்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்தி, இலங்கை கணக்கிற்கு 84,000 டினார்களை மாற்றியுள்ளனர்.

அந்த 6 காவலர்களும் பெரிய பண தொகையை திருடியது போது அவர்களில் ஒருவர் அந்த பணத்தை பாதுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர்கள் Al Rashidiyaவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தை பெற்றுக் கொண்டனர். அங்கு ஒவ்வொருவரும் 160,000 டினார் பணத்தை பெற்றுக் கொண்டனர். மீதமிருந்த ஏனைய செலவீனங்களுக்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

பின்னர் பிரித்துக்கொண்ட பணத்தின் பெரும்பகுதி பணத்தை, பண பரிமாற்ற நிலையங்கள் மூலம் தங்கள் வீடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் குறித்த 6 இலங்கையர்கள் தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

அதற்கமைய அனைவருக்கும் தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையின் பின்னர் குற்றவாளிகளை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.