வடிவேலு, சந்தானம் உள்ளிட்டவர்கள் ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டதால் தற்போது காமெடியன்களில் ஒரு முன்னணி இடத்தில் இருப்பவர் யோகி பாபு.
அவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்திருந்தார். ஷாருக்குடன் அவர் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்துள்ள ஷாருக்கான் “that was a fun film” எனவும் குறிப்பிட்டுள்ளார்.