இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் உபகரணத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பம் இலங்கையின் நீதித்துறையில் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தின் கீழ் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக முறி ஆணைக்குழுவில் சாட்சி பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் குற்றவியல் குற்றம் தொடர்பில், முதல் முறையாக குற்ற விசாரணை திணைக்களத்தின் டிஜிட்டல் ஆய்வகத்தின் பொறுப்பதிகாரி, பீ.எம்.சேனாரத்னவினால் சாட்சி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைக்குரிய முறி வெளியிடப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் முறி ஆணைக்குழுவின் விசேட அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.