ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட சவுதி இளவரசர்

யேமன் எல்லையில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவுடன் சவுதி இளவரசர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு அலுவல் நிமித்தம் அதிகாரிகளுடன் யேமன் எல்லையில் ஹெலிகொப்டரில் பயணமான இளவரசர் மன்சூர் பின் முக்ரின் விபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளார்.

34165சம்பவத்தின்போது கண்காணிப்பு ரடாரில் இருந்து மாயமான ஹெலிகொப்டர், பின்னர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது.

வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஆஸிர் மாகாணத்தின் துணை ஆளுநருமான இளவரசர் மன்சூர் சிறப்பு அதிகாரிகள் குழுவுடன் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்த காரணம் எதுவும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகாத நிலையில் விபத்து நடந்த பகுதி குறித்த மர்மம் இன்னும் நீடிகிறது.

சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக 11 இளவரசர்கள் மற்றும் 4 அமைச்சர்கள் மீது அந்த நாட்டின் எதிர்கால அரசரும், தற்போதைய இளவரசருமான முகமது பின் சல்மான் நடவடிக்கை எடுத்துள்ள பரபரப்பான சூழலில் இந்த ஹெலிகொப்டர் விபத்தும் நடந்துள்ளது.

மட்டுமின்றி யேமன் கிளர்ச்சியாளர்களால் சவுதி விமான நிலையம் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து வீழ்த்தி பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை நிரூபணம் செய்த நிலையில் குறித்த விபத்து நடந்துள்ளது.