அனைத்து வாகனச் சாரதிகளுக்கும் அவசர அறிவித்தல்! மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில்….

நாட்டில் மூன்று நாட்களுக்கு போதுமான பெற்றோலே கையிருப்பில் உள்ளது என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெற்றோலிய வள திணைக்களத்தின் பெற்றோல் கையிருப்பு குறைந்து கொண்டு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

petrolமுத்துராஜவல களஞ்சியத்தில் காணப்படும் பெற்றோல் தொகை கையிருப்பு அனைத்து தீர்ந்து விட்டதாகவும், கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையில் வரையறுக்கப்பட்ட அளவே பெற்றோல் காணப்படுகின்றது.

அத்தியாவசிய தேவைகளுக்காக பெற்றோல் விநியோகம் செய்யப்பட வேண்டியுள்ளது.எதிர்வரும் 9ம் திகதி எரிபொருள் கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளது. கப்பலில் கொண்டு வரப்படும் எரிபொருளை எதிர்வரும் 10ம் திகதியே விநியோகம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெற்றோலை சிக்கனமாக பயன்படுத்துமாறு பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் மக்களிடம் கோரியுள்ளார்.

இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் தருவிக்கப்பட்ட எரிபொருள் கப்பலில் காணப்படும் எரிபொருள் தரம் குறைந்தது என்ற காரணத்தினால், அதனை விநியோகம் செய்ய அனுமதிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் விமர்சனம் செய்யாது பெற்றோலிய வள அமைச்சு தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கவனம் செலுத்த வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.