திட்டமிட்டுக்கொண்டால் இதை தவிர்க்கலாம்..! உஷாராக இன்று செயல்படுங்கள்

தினத்தந்தி நாளிதழின் விழாவில் கலந்து கொள்ள பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு விமான நிலையப் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்..

ஒன் டே விசிட்டாக இன்று (6-11-17) சென்னை வர இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவிலும், மற்றொரு திருமண விழாவிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.

Narendra Modi is a contender for Time 'Person of the Year'

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் அவர் செல்லும் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை சென்னை விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர், அங்கிருந்து காலை 10.30 முதல் 11.30 வரை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இதன் பின்னர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சோமநாதனின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி 11.30 முதல் நண்பகல் 12 வரை நடைபெற உள்ளது.

இதனையடுத்து நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ் அடையாறு கப்பல்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக பகல் 12.45 மணியளவில் டெல்லி திரும்புவார் என தகவல்கள் கூறுகின்றன.

ஆக ஹை செக்யூரிட்டி பிரிவில் இருக்கும் பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் கடுமையான காவல் கண்காணிப்பில் இருக்கும் என்பதால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக விமான நிலையம் முதல் மெரினா வரையிலும், கிண்டி, கத்திப்பாரா, அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு, சாந்தோம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால்,

அந்த வழித்தடங்களில் பயணிக்க இருப்போர் இதற்கு ஏற்றார் போல் தங்களது பயண நேரத்தை திட்டமிட்டுக்கொண்டால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்..

வெள்ளத்தை பார்வையிட தான் வருகிறார் என பலர் நினைத்து கொண்டுள்ளனர்..