பிறந்து ஒருநாளான சிசுவின் இறப்புக்கு இதுதான் காரணம்!

பிறப்பில் சிறுநீரகக் கோளாறு இருந்தமையே திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்துக்குக் காரணமென சட்டவைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் தெரிவித்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவருக்கு கடந்த 3ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் பெற்றெடுக்கப்பட்ட சிசு மறுநாள் வைத்தியசாலையை விட்டு வீட்டுக்குச் சென்ற பத்து நிமிடத்துள்குள் உயிரிழந்துள்ளது.

sisuஇச்சம்பவம் குச்சவெளி பொலிஸ் பிரிவிலுள்ள இறக்கக்கண்டி பகுதியில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த சிசு மயக்கமுற்றதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிசுவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து இன்று (05) சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்திய போதே சிசுவுக்குப் பிறப்பிலேயே சிறுநீரகக் கோளாறு இருந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.