ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டு சக்திகளே சீர்குலைத்து வருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இதற்கு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த இவர்களுக்கு இந்தியா உதவி வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அவர்கள் என்ன செய்தனர்.
ஆறு விடயங்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றை அனுப்பினர். ஆறு நிபந்தனை பற்றியாவது பேச நாட்டின் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததும் செல்ல வேண்டாமா?
முடிவும் முடியாது என்பதை கூறுவதற்காவது போயிருக்கலாம். பிரசன்ன ரணதுங்கவும் பசில் ராஜபக்சவும் இந்திய பெண்களை திருமணம் செய்தவர்கள்.
இவர்கள் இருவர் தான் இந்தியாவுக்கு தேவையான வகையில் வேலைகளை செய்கின்றனர்.
இந்தியாவே இவர்களை இயக்குகின்றது. இரண்டு தரப்பாக பிரிந்து இருப்பதை இந்தியாவின் றோ அமைப்பு செய்து வருகிறது எனவும் சமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.