2022-ல் புதிய இந்தியா..! – சென்னையில் பிரதமர் மோடி உறுதி

சென்னையில் நடைபெற்றுவரும் ‘தினத்தந்தி பவளவிழா’வில் பிரதமர் மோடிகலந்துகொண்டார். விழாவில் உரையைத் துவங்கும் போதும் முடிக்கும்போதும் ‘வணக்கம்’ என்று தமிழில் பேசினார் மோடி. மேலும் பத்திரிகையாளர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

Narendra_Modi (1)பின்னர் பிரதமர் பேசும்போது, “பாமர மக்களின் கருத்துகளை எடுத்துரைக்கும் கருவியாக ஊடகங்கள் விளங்கிவருகின்றன. தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகங்கள் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன. சுதந்திரப் போராட்டத்தின்போது பிராந்திய மொழி ஊடகங்கள் மிகப்பெரும் பங்காற்றின. ‘தூய்மை இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ போன்ற அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. 2022-ம் ஆண்டில் ஊழல், சாதிப் பாகுபாடு, பயங்கரவாதம் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இதைச் சாத்தியப்படுத்துவோம். சென்னை மழைவெள்ளத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்துக்கு மழை நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கும்” என்றார்.