பால் மாவின் விலை 100 ரூபாவினால் அதிகாிக்கப்படலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரிச் சலுகை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் 400கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 100 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது 400 கிராம் எடையுடைய பால் மா 325 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வடைந்தால் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடும் என்பதனால், இறக்குமதி வரியை குறைக்குமாறு நிதி அமைச்சிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், அந்தக் கோரிக்கைக்கு நிதி அமைச்சு செவி சாய்க்கவில்லையென பால் மா இறக்குமதியாளர் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.