குளியாபிடிய பகுதியிலுள்ள பிரபல்யமான ஹோட்டல் ஒன்றில் தேன்நிலவுக்காக சென்ற, தம்பதிகள், தம்மை இரகசியமாக வீடியோ எடுத்ததாக கூறி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த தம்பதிகள், சம்பந்தப்பட்ட ஹோட்டலில், தமது தேன்நிலவுக்காக சொகுசு அறையொன்றை பெற்றுள்ளனர்.
அந்த அறைக் கதவில், சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு துளைகள் காணப்பட்டதாக அவர்கள் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், இரவு நேரத்தில் தம்மை வீடியோ எடுத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த விடயம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, அந்த அறையில் இரு துளைகள் இருந்தமையும், அதன் மூலம் முழு அறையையும் தௌிவாக காணக் கூடியதாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த அரை மாத்திரமன்றி வேறு ஒரு அறையிலும் இதுபோன்ற துளைகள் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எதுஎவ்வாறு இருப்பினும், இதனை கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், குறித்த தம்பதிகளின் தேன்நிலவு வீடியோவாக பதிவு செய்யப்படவில்லை என நம்பவுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சம்பத்தப்பட்ட தம்பதிகள் ஹோட்டலில் அறையை பெற்றமைக்காக ஒருதொகை பணம் மட்டுமே வழங்கியுள்ளதோடு, ஏனைய பணத்தை செலுத்தாது இதுபோன்ற முறைப்பாட்டை முன்வைப்பதாக, ஹோட்டல் நிர்வாகத்தின் சுட்டிக்காட்டியுள்ளனர்.