மாமியார் மருமகள் பிடுங்குப்பாடுகள் நீங்கள் அறிந்த கதைகள். ஆனால் அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி மாமியார் மீது மருமகன் கொண்ட வெறுப்பின் விளைவாக எழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் தனது வெறுப்புக்குரிய மனைவி குடும்பம் தேவாலயத்தில் இல்லாதபோது அவர் நடந்திய இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர் மேலும் இருபது பேர் காயமடைந்தனர்.
முன்னாள் வான் படை உறுப்பினரான டெவின் பற்றிக் கெல்லேக்கு சட்டரீதியான ஆயுதப்பாவனைக்கு அனுமதி இல்லை. ஆயினும் அவரிடம் உப தானியங்கி துப்பாக்கி உட்பட மொத்தம் 3 துப்பாக்கிகள் இருந்தன.
இந்த மூன்று ஆயுதங்களால் தான் அவர் தனது நாசகார தாக்குதலை நடத்தியுள்ளார்.
கவச உடைகளை அணிந்து அதிரடியாக ஆலயத்துக்குள் நுழைந்த டெவின் கெல்லே அங்கு சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் செய்தார்
இது தான் டெக்சஸ் வரலாற்றில் மிக மோசமான பெரிய துப்பாக்கிச்சூடாக அமைந்தது பலியானவர்களில் 5 முதல் 72 வயது வரையானவாகள் அடங்கினர்.
தாக்குதலின் பின்னர் அங்கிருந்து வாகனத்தில் டெவின் கெல்லே தப்பிச்சென்ற போது இன்னுமொரு சம்பவம் இடம்பெற்றது.
டெவின் கெல்லே தப்பிச்செல்வதைக்கண்ட ஒருவா தன்னிடமிருந்த ஆயுதத்துடன் தனது வாகனத்தால் அவரை துரத்திசென்றார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றது
இதில் டெவின் கெல்லேக்கு சூடுபட்டது. இதனையடுத்து தனது தந்தைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த டெவின் கெல்லே தான் உயிர்பிழைக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் இறந்த நிலையில், இருந்த டெவின் கெல்லேயின் உடலை காவற்துறை மீட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மாமியாரை அச்சுறுத்தும் வகையில் டெவின் கெல்லே தொலைபேசி குறுஞ்செய்திகளை அனுப்பியதும் இப்போது தெரியவருகிறது.