விஜய் நடித்த நண்பன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இலியானா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தார். கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் தான் இவர் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு Woman of Substance Award வழங்கப்பட்டது.
மனநலம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக பல முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். இதில் பேசிய அவர் சில நாட்கள் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது கூட தெரியாமல் இருந்தேன்.
மேலும் Body Dysmorphic Disorder என்ற பிரச்சனையும் இருந்தது. அதனால் இதற்கு முடிவு கட்ட தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
எனக்கு பின் சரியான உதவிகள் கிடைத்தது. என்னை நான் ஏற்றுக்கொண்டேன் பிறகு தான் என தற்கொலை மனநிலை மாறியது. எனக்கு என் அம்மா பெரிதும் உதவியாக இருந்தார் என கூறினார்.