பிள்­ளையானை இன்றும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த உத்­த­ரவு

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ரான பிள்­ளையான் எனப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் உள்­ளிட்­ட­வர்கள் மீதான வழக்­கு­ நேற்று திங்­கட்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.  நேற்று மாலை­வரை விசா­ர­ணைகள் இடம்பெற்ற நிலையில் இன்று சந்­தேக நபர்கள் மீண்டும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இதற்­கான உத்­த­ரவை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றம் பிறப்­பித்­துள்­ளது.

pillayan-cid-1 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலைச் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சித் தலை­வ­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன், கட்­சியின் முன்னாள் தேசிய அமைப்­பா­ளரும் முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான பிரதீப் மாஸ்டர் என அழைக்­கப்­படும் எட்வின் சில்வா கிருஸ்­ணா­னந்­த­ராஜா, கஜன் மாமா எனப்­படும் கன­க­நா­யகம் மற்றும் இரா­ணுவப் புல­னாய்வு உத்­தி­யோ­கஸ்தர் எம்.கலீல் முன்னாள் இரா­ணுவ சிப்­பா­யான மது­சிங்க (வினோத்) ஆகியோர் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்­திற்கு அழைத்து வரப்­பட்டு நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்தப்பட்டனர்.