கொள்ளையடிக்கச்சென்றவரின் ஆணுறுப்பை பதம்பார்த்த துப்பாக்கி ரவை!

கடையொன்றில் கொள்ளையடிப்பதற்காக சென்ற இளைஞனின் துப்பாக்கி அவனது ஆணுறுப்பை பதம்பார்த்ததால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

தெற்கு சிகாகோ பகுதியில் டெரியான் பவுன்சி என்ற 19 வயது இளைஞன் கொள்ளையடிப்பதற்காக கடையொன்றில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துவிட்டு பின்னர் துப்பாக்கியை தனது காற்சட்டை பையில் வைத்துள்ளான்.

பின்னர் தப்பியோடும்போது திடீரென எதிர்பாராதவிதமாக காற்சட்டை பையில் இருந்த துப்பாக்கி வெடித்துள்ளது. அதில் இருந்து வெளியேறிய துப்பாக்கி ரவை அவனுடைய ஆணுறுப்பில் பாய்ந்துள்ளது.

இதனால் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் மீது அமெரிக்காவின் சிக்காகோ பொலிஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Capturen v nbvg Capturebcbvgjhnvg