இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்த யுவதியின் காதலை ஏற்காத பெற்றோர் அவளுக்கு லண்டன் மாப்பிளையைத் திருமணம் செய்து வைக்க முற்பட்டுள்ளனர்.
இந் நிலையில் யாழில் மாப்பிளை குடும்பமும் யுவதியின் குடும்பமும் இணைந்து திருமண நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர். குறித்த நிச்சயதார்தம் முடிவடைந்த பின்னர் யுவதியுடன் மாப்பிளை வைபர் மூலம் கதைத்து வந்துள்ளார்.
ஒரு நாள் மாப்பிளைக்கு யுவதியும் இன்னொரு இளைஞனும் கட்டிப் பிடித்து கிஸ் பண்ணும் புகைப்படங்கள் திடீரென வைபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களைப் பார்த்த மாப்பிளை அதிர்ந்துள்ளார்.
குறித்த இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து வினாவியபோது குறித்த யுவதி கம்பஸ் பெடியனோடு படுத்தவள் எனவும் அந்த புகைப் படங்கள்தான் இவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாப்பிளை உடனே சூடானார்.
தனது பெற்றோருக்கும் தனது யாழில் உள்ள நண்பர்களுக்கும் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். யுவதியின் வீட்டில் இது தொடர்பாக விசாரணை தொடங்கியது.
மாப்பிளைக்கு வந்த புகைப்படங்களைக் காட்டுமாறு யுவதியின் தந்தை மாப்பிளையின் நண்பர்களை கேட்டுள்ளார். புகைப்படங்கள் காட்டப்பட்ட போது அது முன்னர் யுவதியைக் காதலித்த இளைஞனுடையது என அறிந்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக நண்பர்களுக்கு யுவதியின் தந்தை கூறி தனது மகளை கட்டாயப்படுத்தி இவ்வாறு முத்தமிட வைத்ததாகவும் அது சிறு வயதில் நடந்த சம்பவம் எனவும் கூறி குறித்த இளைஞனை தாக்கி பொலிசாரிடம் ஒப்படைக்குமாறும் கோரியுள்ளார்.
இது தொடர்பாக மாப்பிளையின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யுவுதியின் காதலன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடாத்திய போது குறித்த புகைப்படங்களை யுவதியே மாப்பிளைக்கு அனுப்பச் சொன்னதாக யுவதியைக் காதலித்த காதலன் அவர்களுக்கு கூறியுள்ளார்.
அதனைக் கேட்ட யுவதியின் வீட்டுக்குச் சென்ற மாப்பிளையின் நண்பர்கள் ஏமாற்றி திருமணம் செய்ய முற்பட்டதாக கூறி யுவுதியின் தந்தையைத் தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது.
இச் சம்பவத்தை அடுத்து யுவதியின் தந்தை தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யுவதியின் தந்யையும் தாயும் அரச அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.