சென்னைக்கு விடிவு.. இந்த உலகிற்கே அழிவு.. சீனா கையிலெடுத்திருக்கும் விபரீத ஆயுதம்..?

சென்னை நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் திணறி வரும் நிலையில், அதற்கு விமோசனம் தரும் வகையில் சீனா ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

அது தமிழகத்திற்கு வரப்போவதில்லை என்பது வேறு விசயம் ஆனால் இதனால் உலக நாடுகள் பலவும் திகைப்பிற்கு உள்ளாகி இருகின்றன.

ஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பலை தங்கள் நாடு உருவாக்கியதாக சீனா நாட்டு ஊடகங்கள் திகில் தகவலை வெளியிட்டு உள்ளன.

இதன் மூலம் என்ன விளைவுகள் எல்லாம் நிகழப்போகிறது என்பதை இனி காணலாம்.

தற்போது சீனா உருவாக்கியுள்ள ‘டியான்குன் ஹாவோ’ என்னும் அந்த தூர்வாரும் கப்பல் ஜியாங்ஸு மாகாணத்தில் உருவாக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடலில் பரிசோதனைக்காக இறக்கப்பட்டது. அதன் நீளம் 140 மீட்டர்; அகலம் 28 மீட்டர்.

மணிக்கு 6,000 கன அடி கடல் மணலைத் தூர்வாரும் திறன் கொண்டது இந்த கப்பல். இந்த கப்பலை ‘தீவுகளை உருவாக்கும் அதிசயக் கப்பல்’ என்று சீன ஊடகங்கள் பாராட்டி தள்ளியுள்ளன.

அடுத்த 6 மாதங்களுக்கு அது ஆழம் குறைந்த கடல் பகுதியிலும் ஆழ்கடல் பகுதியிலும் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பலை சீனா உருவாக்கியிருப்பது பிராந்திய நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இந்த மாபெரும் தூர்வாரும் கப்பலைக் கொண்டு அப்பகுதியில் மேலும் புதிய தீவுகளை சீனா உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தென் சீன கடல் பகுதி முற்றிலும் சீன ஆதிக்கத்துக்கு உள்பட்டது என்று சீனா கூறி வருகிறது. அப்பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கும் சீனா தனியுரிமை கொண்டாடி வருகிறது.

ஆனால் சர்வதேச கடல் பகுதியில் உள்ள அந்தத் தீவுகளில் தங்களுக்குப் பாரம்பரிய உரிமை இருப்பதாக வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணை ஆகிய நாடுகளும் கூறி வருகின்றன.

அது சர்வதேச கடல் பகுதி என்று நிறுவும் நோக்கத்துடன் அமெரிக்கா அவ்வப்போது தனது கடற்படைக் கப்பல்களை அங்கு அனுப்பி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.