வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள மயானத்தை அண்டியுள்ள குளத்தில் குப்பை கொட்டுவதற்கு நேற்று மாலை சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கப் ரக வாகனத்தில் குப்பைகளை எடுத்துச் சென்ற வேளையில் நேற்று மாலை 5.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள மக்களின் எதிர்ப்பையடுத்து பொலிஸார் தலையிட்டு வாகனத்தையும், வாகனத்தின் சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
குறித்த சாரதியை இடைமறித்த மக்கள் பொலிஸாரிடம் அறிவித்ததனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளதோடு, வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் பல குடும்பங்கள் வசித்துவருகின்ற நிலையில் இரவு வேளைகளில் சிலர் அப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டுச் செல்வதாகவும், இதன்காரணமாக அப்பகுதியில் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.