சம்பந்தனிடம் தமிழில் கேள்வி கேட்ட நாமல்!

அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்ற காரணத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இருக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் உணரவில்லையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமல் இந்த கேள்வியை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவேற்றியுள்ளார்.

“அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை கோராது மௌனமாக இருக்க முடியாது என்பதை, மூத்த அரசியல்வாதி R.Sampanthan ஐயா அவர்கள் ஏன் உணரவில்லை!” என பதிவேற்றியுள்ளார்.

Capturecx