மூடப்பட்டுள்ள வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள பெறுமதியான பொருட்களை திருடும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
நவகமுவ, ரணாகல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு திருடப்படும் பொருட்களின் மூலம் கிடைக்கும் பணத்தை கசினா விளையாடுவதற்கும், பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கும் செலவிட்டுள்ளார்.
மனைவியை பிரிந்த குறித்த நபர், ராகம பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு தான் அங்கு வாழ்வதாக பலரையும் நம்ப வைத்துள்ளார்.
எனினும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் அறை ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கிருந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
காலை நேரங்களில் தொழிலுக்கு செல்வதனை போன்று நடந்து சென்று மூடியிருக்கும் வீடுகளை தட்டி அங்கு யாரேனும் உள்ளார்களா என்பதனை உறுதி செய்து கொள்வார். அப்படி யாராவது இருந்தால் போலி விலாசம் தொடர்பில் தகவல் கேட்பதை போன்று பாசாங்கு செய்வார்.
அப்படி அந்த வீடுகளில் யாரும் இல்லை என உறுதியானால் வீட்டின் ஜன்னல்களை உடைத்து திருடுவது அவரின் வழக்கமாகும்.
தலங்கம, மஹரகம, கொஹுவல, அத்துருகிரிய உட்பட கொழும்பின் பல பிரதேசங்களில் 15க்கும் அதிகமான வீடுகளில் குறித்த நபர் திருடியுள்ளார்.
குறித்த நபரை கைது செய்யும் போது அவரிடம் 25 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ளி பொருட்கள் மற்றும் விலை மதிப்பிட முடியாத இரத்தின கற்கல் மற்றும் மடிக்கணினி ஆகியவைகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் கசினோ நிறுவனம் ஒன்றில் உறுப்பினராக பதிவாகியுள்ளார். அத்துடன் அழகிய பெண்களுக்கு அவர் அடிமையாகியுள்ளார்.
20 வயதிலிருந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் குறித்த நபர், பாலியல் தொழிலாளிகளுக்கு அதிகளவு பணம் செலவிடப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.