போத்தலில் தானே பெற்றோல் நிரப்பமாட்டாய்… இதில் நிரப்பு – இலங்கையில் சுவாரஸ்யம்

நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது.

தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன.