நீரோடையில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை, கட்டியணைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு கடுமையான எச்சரிக்கையும், தண்டமும் விதித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
பிபிலை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நீரோடையில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை, அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகத் தெரிவிக்கும் இளைஞன் கட்டியணைத்தமை குறித்து, பிபிலைப் பொலிஸாரால் இளைஞனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இளைஞனுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபா தண்டமும், பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு 10 ஆயி ரம் ரூபா இழப்பீடும் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.