அரசு பள்ளி மாணவனின் சாதனை !

கோவை மாட்டத்தில் சுண்டக்காமுத்தூா்  பகுதியில் அரசுப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் “வெங்கட ரமணன்“  எனும் மாணவா் ஒருவா் முதியவா்களுக்கு சாரியான நேரத்தில் மாத்திரை வழங்கவும், அவா்களை கண்காணிக்கவும் பித்யேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளான்.

இப்பிரத்யேக ரோபோவின் வடிவமைப்பு அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.தற்போ முதியோர்களுக்கு சாரியான நேரத்தில் மாத்திரை, தண்ணீா் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் நடைபெற உள்ள அறிவியல் போட்டியில் வெங்கட ரமணன் கலந்து கொள்ள உள்ளார்.

man-210x158இது தொடா்பாக மாணவா் வெங்கட ரமணன் கூறுகையில், நான் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தில் மாத்திரை, தண்ணீா் உள்ளிட்டவற்றை உள்ளே வைத்து விட்டு நேரத்தை செட்செய்து விட்டால் போதும். காலை மாலை இரவு என நாம் பதிவு செய்து வைத்துள்ள நேரத்திற்கு தகுந்தாற்போன்று இயந்திரத்தில் சப்தம் ஒலிக்கும். இத்துடன் இயந்திரம் மாத்திரையையும் எடுத்துக் கொடுக்கும். இதனால் மாத்திரை சாப்பிடுவதை யாரும் மறக்க வாய்ப்பில்லை. எந்திரம் மாத்திரை, தண்ணீா், பிராணவாயு உள்ளிட்ட 9 பொருட்களை வழங்குகிறது. மேலும், எந்திரத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் முதியோர்களை தொடா்ந்து கண்காணிக்கவும் முடியும். இவற்றை மருத்துவமனைகளில் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் மாணவா்  தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடா்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் கண்காட்சியில் அவா் கலந்துகெள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.