சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?

சர்க்கரையை அளவில்லாமல் தொடர்ந்து சாப்பிட்டால் அது நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோயை ஏற்படுத்தி பல உடல் உபாதைகளை உண்டாக்கிவிடும்.

4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மாற்றங்கள்?
  • சர்க்கரையை சாப்பிடாமல் நிறுத்திய முதல் வாரத்தின் ஆரம்பத்தில் அடிக்கடி பசியெடுப்பது, நிறைய தண்ணீர் தாகம் எடுப்பது, சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படும்.
  • இரண்டாவது வாரத்தின் முதல் நாளில் இருந்து தலைவலி மற்றும் சோர்வு நிலை முற்றிலுமாக குறைந்துவிடும்.
  • மூன்றாவது வாரத்தில் இருந்து எப்போதும் மந்தமான நிலையை ஏற்படுத்தும். அதன் பின் சிறிது சிறிதாக சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.
  • நான்காவது வாரத்தில் சருமத்தின் வறட்சி குறைந்து பல்வேறு சரும பாதிப்புகள் தடுக்கப்பட்டு, சருமம் இயற்கையாகவே பொலிவு உண்டாகும். அதோடு கொழுப்பு மற்றும் உடல் எடையும் குறையும்.
சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்?
  • நம் உடம்பில் சர்க்கரை அதிகமாக இருந்தால் ரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்ந்து சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர் பிரச்சனை ஏற்படும்.
  • அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை இருந்தால், அது ரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றி கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும்.
  • உயிரணுக்களால் ரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து உடல் சோர்வு, அசதி உண்டாகும்.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், நரம்பு மண்டலம் பாதிப்படைந்து, கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது, மரத்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், நம் உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்து வெட்டுக் காயங்களை விரைவில் குணமடைய செய்யாது.1_frqKS5AHTuLDyuugGywtsg