யாழ். மாவட்டத்தில் தென்மராட்சி, சாவகச்சேரிப் பகுதியில் நேற்று காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 69. 0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவுப் பகுதியில் குறைந்தளவாக 22.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப்பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
இதன் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் திருநெல்வேலிப் பகுதியில் 59.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறைப் பகுதியில் 53.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ். நகர்ப் பகுதியில் 34.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அச்சுவேலியில் 26.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 27.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், ஆனையிறவுப் பகுதியில் 45.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டி சுட்டான் பகுதியில் 58.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், அளம்பில் பகுதியில் 13.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வள்ளிபுனம் பகுதியில் 7.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.