சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கியுள்ள 30 எம் வகை ரோந்துப் படகு நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவினால் இயக்கி வைக்கப்பட்டது. ரோக்கியோவில் உள்ள சுமிதகாவ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.
30 எம் வகை ரோந்துப் படகுகள் இரண்டை, சிறிலங்காவுக்கு கொடை அடிப்படையில் வழங்க ஜப்பான் இணங்கியிருந்தது.
இதில் முதலாவது படகே நேற்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் இயக்கி வைக்கப்பட்டது.
இந்தப் படகுக்கு ‘501’ என்ற இலக்கமிடப்பட்டுள்ளது. இது சிறிலங்கா கடலோரக் காவல் படையின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும். இந்தப் படகுகள், 27 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியவையாகும்.